Sunday, June 8, 2008

அண்ணாச்சி கடையும் ஆளுயர தராசும்

அண்ணாச்சி கடையும் ஆளுயர தராசும்

எந்த ஒரு வியாபார நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாலும் , அடையாளமாக முதலில் தெரிவது அங்கே தொங்கும் பெரிய தராசு தான். ஒரு வியாபாரியின் அடையாளமும் அதுதான்.

முதலாளியின் நேர் எதிராக தராசும், கைப் பக்கமாக பணப் பெட்டி அல்லது
முதலாளிக்கு முன்னால் பணப் பெட்டி கைப் பக்கமாக தராசு இதுதான் கடையின் முதலாளி அடையாளம்.

இந்த மின்னனு தராசு வந்தாலும் வந்தது , முதலாளிக்கு முன்னால் இருந்த (அல்லது இருக்க வேண்டிய ) தராசு , மின்சார வசதிவுள்ள பக்கம் சென்று விட்டது.

எந்த பொருளையும் நம் கண் முன்னே எடை போட்ட காலம் இப்போது இல்லை . இந்த அவசர உலகத்தில் அதற்கு யாருக்கும் நேரமில்லை.

தராசு எங்கே என்று கேட்டால் கடைக்கு பின்னால் அல்லது கிட்டங்கியில் இருக்கிறது என்கிறார்கள்.

இரண்டு தட்டுகள் இருந்த தராசில் (கடைக்காரர் தட்டு மற்றும் வாடிக்கையாளர் தட்டு ) இப்போது ஒரு தட்டு .

இப்படி காணாமல் போன கைத் தராசுகள் பற்றி, தராசு உற்பத்தி செய்யும் நண்பரிடம் விசாரித்த பொது அவர் அளித்த விளக்கம் :

உலகமய மாக்களின் பொது , பொருட்களின் தரத்தை விட , அதன் தோற்றம் பற்றிய அக்கறை அதிகமாகிப் போனது . மூட்டை மூட்டையாக பொருட்களை அனுப்பிய உற்பத்தியாளர்கள், தற்போது அதனை அவர்களே (உற்பத்தியாளர்கள் ) தேவையான சிறு சிறு அளவில் எடை போட்டு நன்றாக அலங்கரித்து அனுப்பி வைத்தனர் . இதுதான் முதற் பெரும் காரணம் . ( உலகமய மாக்களில் சிறு சிறு கடைகளே குறைந்து போயின அது தனி பதிவு )

இரண்டாவதாக தராசு உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் தாறுமாறான விலையேற்றம் .


மூன்றாவதாக வந்தது தான் இந்த மின்னணு தராசுகள் .

நான்காவதாக மக்கள் ( இவர்களை சொல்லவில்லை என்றால் எப்படி) மின்னணு தராசில்
தான் எடை சரியாக இருக்கும் என்ற மக்களின் தவறான எண்ணம். (வாடிக்கையாளர் நல அமைப்பை சேர்ந்தவர்களை கேட்டால் , மின்னணு தராசில் நடக்கும் தவறுகளை சொல்வார்கள் )

வியாபார நிறுவனங்கள் , பழக கடைகள் , காய்கறி சந்தைகள் , பழைய பேப்பர் கடைகள் இப்படி எல்லா இடங்களிலும் இப்போது மின்னணு தராசு தான் , நடமாடும் கடைகள் தவிர .

பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போல, கடையின் உள்ளே தொங்கிய தராசு (வியாபாரியின் அடையாளம் ) இப்போது இல்லை.

அன்புடன்
கே ஆர் பி

9 comments:

Divya said...

கடையில் தொங்கும் தராசு பத்தி இவ்வளவு தகவலுடன் ஒரு பதிவா??

நல்லா எழுதியிருக்கிறீங்க!

Divya said...

\பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போல, கடையின் உள்ளே தொங்கிய தராசு (வியாபாரியின் சின்னம் ) இப்போது இல்லை.\


இப்போதெல்லாம் திருமணமான பெண்களும் கழுத்தில் தாலி போட்டுக்கொள்வதில்லை......ஃபேஷன் சார் ஃபேஷன்!!
என்னதை சொல்றது, கலிகாலம்!!!

Anonymous said...

பதிவை பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும், தங்களுக்கு நன்றி திவ்யா.

(எந்த பதிவை படித்தாலும் நினைப்பதுண்டு ஆனால் செய்வதில்லை. இனி முயற்சிக்கிறேன் )

அன்புடன்
கே ஆர் பி

Anonymous said...

தராசு இருக்கும் மற்றுமொரு முக்கியமான இடம் நீதி மன்றம் . இதுவும் தராசின் சிறப்பு வித்யா.

அன்புடன்
கே ஆர் பி

முரளிகண்ணன் said...

மிண்ணனு தராசு நல்லதுதான். ஆனால் அதை அதிகாரிகள் நன்கு பரிசோதிக்க வேண்டும் (ஆட்டோ மீட்டர் போல அல்ல)

Anonymous said...

வருகைக்கு நன்றி முரளி

அன்புடன்
கே ஆர் பி

மோகன் கந்தசாமி said...

KRP,
பதிவு சுவாரசியமாக இருந்தது!

Anonymous said...

வருகைக்கு நன்றி மோகன் கந்தசாமி

அன்புடன்

கே ஆர் பி

Anonymous said...

http://vavaasangam.blogspot.com/2008/06/mail-id.html

வந்து சேருங்க