Saturday, April 26, 2008

ரெண்டு கதா நாயகர்கள் - கதா நாயகர்களின் ரெண்டு வேடங்கள்

முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சியும்
கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சியும்

( வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு இல்லை )

ஒன்று : ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்களின் வீழ்ச்சி

தமிழ்த் திரைப்படங்களின் ஜாம்பவான்களான எம் ஜி ஆர் , சிவாஜி ஆகிய இருவரின் கால கட்டங்களில் சிறப்பாக இருந்த ரெண்டு கதா நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் கமல் ரஜினி ஆகிய இருவரின் வரவுக்கு பின்னரும் நன்றாகத்தான் இருந்தது . இருவரும் இணைந்து நடிப்பதில்லை என முடிவெடுத்த பின்னரே வீழ்ச்சி அடையத் துவங்கியது .

காரணங்கள் பலவாக இருந்தாலும் எனக்கு தெரிந்த சில காரணங்களை பட்டியல் இடுகிறேன் .

ஆரம்பங்களில் கதா நாயகனின் முழு வாழ்க்கையையும் சித்தரித்த தமிழ் சினிமா பின்னாளில் கதாநாயகனின் வாழ்க்கையில் நடந்த குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் காட்டியது .

சமுதாயத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பானது சிதைந்து , தனிக்குடித்தனம் உருவான பொது அது நம் திரைப்படங்களிலும் பிரதி பலித்தது . கூட்டுக்குடும்ப கதையாக இருந்தால் குறைந்த பட்சம் மூன்று கதாநாயகர்கள் பத்து குணசித்திர நடிகர்களாவது இருப்பார்கள் . ஆனால் பின்னாளில் நடந்ததே வேறு கதையும் சுருங்கி திரையில் நடிப்பவர்களும் (எண்ணிக்கையில்) குறைந்தனர். ( கலையில் ஏற்படும் மாற்றம் கலாச்சாரத்திலும் , கலாச்சாரத்தில் ஏற்படும் மாற்றம் கலையிலும் பிரதி பலிப்பதும் இயல்பே. )

ரெண்டு கதா நாயகர்கள் என்றால் , ஒருவருக்கு ஒருவர் இணையான கதா நாயகர்களால் இருந்தால் மட்டுமே திரைப்படம் சிறப்பாக அமையும் . எம் ஜி ஆர் , சிவாஜி (அதிகம் இணைந்து நடிக்க வில்லை என்றாலும் கூட ) அவர்களுக்காக எழுதப்பட்ட கதைகளில் கூட மற்றவர்களுக்காக (ஜெமினி கணேசன் எஸ் எஸ் ராஜேந்திரன் பாலாஜி ஏ வி எம் ராஜன் மற்றும் பலர் ) சிறப்பான பாத்திரங்களை ஒதுக்கினர் . ஆனால் கமல் ரஜினி இருவரும் அதிக பட்சம் தங்கள் படங்களில் சேர்த்துக் கொண்டதே , சரத் பாபுவை மட்டும் தான் .

(சில படங்கள் : " பார்த்தால் பசி தீரும் " ஒன்று போதாதா?
/ பாச மலர் / படித்தால் மட்டும் போதுமா / அவள் அப்படித்தான் / நினைத்தாலே இனிக்கும் / இளமை ஊஞ்சலாடுகிறது / அவர்கள் / பதினாறு வயதினிலே , சின்ன தம்பி பெரிய தம்பி / அக்னி நட்சத்திரம் / குருதிப் புனல் / பிரண்ட்ஸ் )


பின்னர் திரையுலகினர் கண்டு பிடித்த " பஞ்ச் " எனப்படும் பேஜாரான வசனங்களால் ரெண்டு கதாநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் முழுமையாக வீழ்ச்சி அடைந்தது.

அது தவிர ரெண்டு கதா நாயகர்கள் என்றால் ரெண்டு பேருக்கும் இணையான சம்பளம் , உடைகள் , தாங்கும் வசதி , சண்டைக் காட்சிகள் , பாடல்கள் , துணை / இணை வசதிகள் உள்பட (இணையான ) முக்கிய நடிகைகள் என தயாரிப்பாளரும் இயக்குனரும் திக்கித் திணறி , தட்டுத் தடுமாறினர் .

அவ்வப்போது தமிழில் சத்யராஜ்-பிரபு, பிரபு-கார்த்திக் , விஜய்-சூர்யா என படங்கள் வந்திருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளத்திலும் இந்தியிலும் இன்றும் ரெண்டு மூன்று கதா நாயகர்கள் நடித்த நல்ல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி அடைகின்றன.

முக்கியமாக மக்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன . அதே போன்ற திரைப்படங்கள் தமிழில் தற்போது வெளி வராதது வேதனையே .


இரண்டு : கதா நாயகர்கள் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களின் எழுச்சி

(ஆண்டவன் ஒரு வழியை அடித்தால் மற்றொரு வழியை திறப்பான் என்பது போல , தவறாக தீர்ப்பு எழுதியவர்களே அதை திருத்தி எழுதுவது போல ) தமிழ் சினிமா ரெட்டை நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் குறைந்தவுடன் ரெட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்தன .

ரெண்டு நாயகர்கள் இல்லை என்றானவுடன் கதைக்கு தேவைப்படும் மற்றொரு முக்கிய பாத்திரத்தை தாங்களே ஏற்று நடித்தனர் .

ரெட்டை வேடங்களிலும் வித்தியாசமான முகத் தோற்றம் , பேச்சு , உடை என பெரும் புதுமைகள் நடந்தது . அதில் பெரும் பங்கு கமல் ஹாசனையே சேரும் . உதாரணமாக கல்யாண ராமன் அபூர்வ சகோதரர்கள் (அப்பு )


விரைவில் முன்னணி நடிகராக மாற ரெட்டை வேடங்கள் பெரிதும் துணை புரிந்தன . அதில் வெகு சீக்கிரத்தில் பலனும் அடைந்தவர் நடிகர் சரத் குமார் மட்டுமே .


தற்போது ரெட்டை வேடங்களையும் தாண்டி மூன்று , நான்கு என தொடங்கி பத்து வரை வந்து விட்டது . இந்த நிலை தொடர்ந்தாள் நம்ம " ச்சின்ன பையன் " சொன்னது போலாகி விடும் . ( நன்றி ச்சின்ன பையன் -
http://boochandi.blogspot.com/2008/04/2030.html )


திரைப்படங்களில் ( கதைக்கு தேவை இல்லாத பட்சத்தில் ) நாயகர்களின் ரெட்டை வேடங்கள் குறைந்து , (கதைக்கு தேவைப் படுமெனில் ) ரெண்டு கதா நாயகர்களின் திரைப்படங்கள் வருவது எப்போது ?

அன்புடன்
கே ஆர் பி

Friday, April 25, 2008

ரெண்டாவது குரல்

வ வா சங்கத்து போட்டிக்கான பதிவு அல்ல


முதல் பதிவு : VISIT MILETUS: கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!



நீங்க மலை மேல பேருந்தில் போகும்போது உங்க மனசு சொல்லும்
மலையிலிருந்து பார்க்க எவ்வளவு நல்லா இருக்கு ? கூடவே உங்களுக்கு மட்டும் கேட்கும் உங்களோட இரண்டாவது குரல் அது சொல்லும் பேருந்தோட கீழ விழுந்தா ஒரு எலும்பு மிஞ்சாது அது தாங்க அதே தாங்க . பேருந்துல இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட இரண்டாவது குரல் இது மாதிரி எதாவது சொல்லும். ஆனா யாரும் வெளிய சொல்ல மாட்டாங்க .

நம்ம பினாத்தல் சுரேஷ் சொல்லுவாரே
முதல் குரல் அனுபவச் சிதறல்கள் ன்னு சொல்லும்
ரெண்டாவது குரல் அடங்குடா மவனேன்னு சொல்லும் . அது தாங்க !!!!

(நன்றி சுரேஷ் : http://penathal.blogspot.com/)

எப்போதுமே நமக்கு மட்டுமே கேட்கும் நம்ம ரெண்டாவது குரல் ரொம்ப லொள்ளு புடிச்சதுங்கோ . அதுக்கு இடம் , பொருள் , ஏவல் , சூழல் , சூழ்நிலை , சமயம், சந்தர்ப்பம் , ஆள் தராதரம் எதுவும் தெரியாதுங்கோ .

ஆனா இன்னும் சில பேருக்கு அது ரொம்ப பொறுப்பா அறிவுரை ஆலோசனை எல்லாம் சொல்லும் .

முதல் குரலும் ரெண்டாவது குரலும் எதிரும் புதிருமா இருந்தா வாழ்க்கை ஜாலியா இருக்கும். ரெண்டு குரலும் நக்கலாவோ, ரெண்டு குரலும் சீரியஸா இருந்தாலும் ரொம்ப கஷ்டங்க !


அது நீங்க சோகமான இடத்துக்கு போனா அது நக்கல் நையாண்டியாக இருக்கும் . நீங்க சந்தோசமான இடத்துக்கு போனா அது இல்லாததை கற்பனை பண்ணி உங்களை சோகமா ஆக்கிரும்.

நீங்க ஆளுங்க நிறைய வந்து போற இடத்துக்கு போனா அப்பத்தான் உங்க ரெண்டாவது குரல் (அங்க வர்ற ஆளுங்களும் , அவங்க பேசறதும் ) ரொம்ப வேகமா இருக்கும் .

நீங்க உங்க ரெண்டாவது குரல் கிட்ட ரொம்ப கவனமாக இருக்கனுங்க
உங்களோட ரெண்டாவது குரல் மத்தவங்களுக்கும் கேட்க ஆரம்பிச்சா நீங்க பார்க்க வேண்டிய ஆளுங்களும் ரெண்டுங்க ஒன்னு மருத்துவர் ரெண்டு மந்திரிச்சு கயிறு கட்டுறவர்.

நேத்து கூட வெட்டிப்பயல் பின்னூட்டம் பார்த்துட்டு
முதல் குரல் : அப்பாடா ஒரு வழியா எழுதி முடிச்சுட்டோம்னு சொல்ல
ரெண்டாவது குரல் வழக்கம் போல “ சங்கத்து சிங்கங்கள் படிச்சுட்டு பின்னூட்டம் போடட்டுண்டா ” ஒரே ரகளைங்கோ

இன்னிக்கு காலையில் ரெண்டாவது குரல் என்ன சொல்லுச்சு தெரியுமா ?
முதல் குரல் : நேத்து போட்ட முதல் பதிவுக்கு ரெண்டு வரணும் என்ன தெரியுமா ? ஆட்டோவா இல்லை டாடா சுமொவா சொல்லு பார்க்கலாம் ?.
ரெண்டாவது குரல் : ரெண்டும் வரணும்

ரெண்டுல எது வந்தாலும் நாங்க அடுத்த ரெண்டுல குதிக்க சுலபமா இருக்கும் அதாப்பா ஒன்னு சினிமா ரெண்டு அரசியல் . ( நன்றி கிவியன் ) http://mounam.blogspot.com/2008/04/blog-post.html


அன்புடன்
கே ஆர் பி .


Thursday, April 24, 2008

கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

வ வா சங்கத்து போட்டிக்கான (நகைச்சுவை )பதிவு

http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html

தினத் தந்தி :
முதல் அமைச்சர் மு கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , (மே ஒன்று உழைப்பாளர் தினமாக இருப்பதால் ) மே இரண்டு முதல் முழு ஓய்வு

தினகரன் :
தமிழக முதலமைச்சராக மே இரண்டு ஸ்டாலின் பதவி ஏற்கிறார் .

தினமலர்
ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க , அன்பழகன் வகித்த இரண்டாம் இடத்திற்கான தேர்தல் : கலைஞர் அறிவிப்பு .

தமிழ் ஓசை
இரண்டாம் இடத்திற்கு தேர்தலா ? தி மு க இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிர்ச்சி. உள்ளே முழு விவரம்.

நமது எம்ஜிஆர்
விஜயகாந்த் , சரத்குமார் இரண்டு பேரின் விண்ணப்பங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் . - ஜெயலலிதா
தேர்வுக் கமிட்டியில் வக்கீல் ஜோதி - இரண்டாம் தடவையாக பேரதிர்ச்சி அடைந்தேன்

முரசொலி.
அறிவாலயத்தில் இரண்டாம் இடத்திற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் வேலை துவங்கியது. ரஜினியின் விண்ணப்பத்தை எதிர்பார்த்த கருணாநிதி ஏமாற்றம். கலைஞர் கவிதை

குமுதம்
இரண்டாம் இடம் கூட பெண்களுக்கு இல்லையா ? இது ஆணாதிக்கம் . குஷ்பூ ஆவேசம் .

ஆனந்த விகடன்
இரண்டாம் இடமாக இருந்தாலும் பரவாயில்லை. ராடான் குடும்பத் திலேயும் அப்படித்தானே இருக்கிறீர்கள் . சரத்துக்கு ராடான் ராதிகா ஆறுதல்

ஜூனியர் விகடன்
இரண்டாம் இடத்தில் விஜயகாந்த் ஏன்? கலா நிதி ஆதரவா ? தயா நிதி பேட்டி

கலைஞர் டிவியில் ஸ்டாலின் :
விஜயகாந்த் , சரத் குமார் இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாழ்த்துச் செய்தி .

ஜெயா டிவியில் அம்மா :
தயா நிதியாக இருந்தால் தமிழ் தவிர இரண்டு அன்னிய மொழிகளில் கூட பேசலாம் . விஜயகாந்தி டம் எப்படி பேசுவது? கேப்டன் தமிழ் வேறு எனக்கு தெரியாது. அம்மா சோகம் .

மக்கள் டிவியில் ராம தாஸ் சொன்னதாக ஜி கே மணி :
இரண்டாம் இடத்தில் சினிமாக் காரர்களை நியமிக்க கூடாது . எங்கள் சொல்லை மீறினால் மூன்றாவது அணி அமைப்போம் இல்லை இல்லை . அண்ணா திமுகவோடு இணைந்து அங்கேயும் இரண்டாவது இடத்தில் இருப்போம் .

சன் டிவியில் விஜயகாந்த் :
எம் ஜி ஆரூம் திமுக வில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தவர் தான் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞரை விமர்சித்ததற்கு மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் . என்னா தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு மட்டும் தான்.

தேர்வு நிலவரம்
கலைஞர் கருணாநிதி , புரட்சி கலைஞரை வேறு வழியில்லாமல் இரண்டு மனதாக தேர்ந்து எடுத்தார்.

கடைசி செய்தி
துக்ளக் ஐயோ பக்கங்களில் ஞானி
விஜய காந்த்தோடு கடந்த இரண்டு ஆண்டுகள் முழுமையாக மோதியோ , கவனித்தோ பார்த்ததில் , ஸ்டாலின் கற்றுக்கொள்ள இரண்டு (எப்படி தமிழ் பேசக்கூடாது , வாரிசை மட்டுமல்லாமல் (மனைவி வீட்டு) குடும்பம் உள்பட எப்படி உள்ளே கொண்டு வருவது ) விஷயங்கள் இருப்பதாக கலைஞர் நினைத்து இருக்கலாம்.

அன்புடன்
கே ஆர் பி

Tuesday, April 22, 2008

கிரிக்கெட் தெரியாமல் ஒரு கிரிக்கெட் பதிவு.

கிரிக்கெட்டை (மேட்ச் பிக்சிங், விளம்பரங்களில் காசு சேர்ப்பவர்கள் என்றெல்லாம்) விமர்சனம் செய்யாமல் , இன்னும் லீவு போட்டு கிரிக்கெட் பார்க்கும் அன்பு ரசிகர்களுக்காக இந்த பதிவு.

ஐ பி எல் கிரிக்கெட் குறித்து எனக்கு ஒரு சந்தேகம்.

உதாரணமாக கங்குலி தன்னோடு விளையாடும் ரிக்கி பாண்டிங்கிற்கு , அணித் தலைவர் என்ற முறையில் பிற (இந்திய ) ஆட்டக்காரர்களின் திறனை ஆலோசனையாக அல்லது கருத்தாக அளிக்க வேண்டி வரும்.

ஆனால் பின்னாளில் உலக கோப்பைக்காக ரிங்கியோடு மோதும் போது, இது இந்திய அணிக்கு மிகப்பெரிய இடைஞ்சலாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?

(அப்பாடா !! கிரிக்கெட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் பதிவு போட்டாச்சு. )

Tuesday, April 15, 2008

உங்களுக்கு இது போல் நேர்ந்ததா?

இது அண்மையில் எனக்கு நேர்ந்தது.

வெளிநாட்டில் பணிபுரியும் நான் வழக்கம் போல் ஒரு தமிழ் ஓட்டலுக்கு சென்றேன். தோசையை வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு எதிரில் அமர்ந்த ஒருவர் செல்போனில் யாரோடு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். திடீரென , நான் ஸ்பூனால் சாப்பிடாமல் கையால் சாப்பிடுவதை நண்பரிடம் விமர்சனம் செய்தவர், பின் மரியாதைக்குறைவாக திட்ட ஆரம்பித்தார். எனக்கு பாதியில் எழுந்து விடுவதை விட வேறு வழி தெரியவில்லை. நானும் எழுந்து வந்து விட்டேன்.

அவர் சொன்னது, "இந்தியாவில் இருந்து வந்துட்டானுங்க.நாகரீகம் இல்லாம, இதுல உலகம் முழுவதும் பரவி இருக்கிரானுங்க பேர் வேற".

அது தமிழ் ஓட்டல் தான் என்பதால், என்னைத்திட்டியவர் கண்டிப்பாக தமிழராக அல்லது இந்தியராக இருக்கணும்.

இது போல் மும்பை, டெல்லி வாழ் தமிழர்களுக்கு கூட ஏற்பட்டு இருக்கணும்.
உங்களுக்கு இது போல் நேர்ந்ததா? நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் ஒருவழியா மனசை இப்படித்தான் தேத்திக்கிட்டேன் .
௧)நான் அன்னிக்கு உண்மையிலே அநாகரீகமா சாப்பிட்டு இருக்கணும்.
௨)வெளிநாடு வரைக்கும் வந்த நான், ஸ்பூனால சாப்பிடவும் பழகி இருக்கனும்.

வெங்காய தோசையை ஸ்பூனால சாப்பிடறது உண்மையிலே எனக்கு கஷ்டங்க. உங்களுக்கு?

அன்புடன்
கே. ஆர். பி.

Thursday, April 10, 2008

நட்பு என்பது தற்காலிக நிலையா..............

உங்ககூட படிக்கிற அல்லது வேலை பார்க்கிற யாரையாவது நீங்க நண்பர்னு அறிமுகப்படுத்தினா, நீங்க இன்னும் அவரை உங்களோட சகோதரர், சகோதரி அல்லது இன்னும் ஏதேனும் உறவுக்குள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படின்னு நினைக்கிறேன்.

வள்ளுவர் சொன்னது ஒருவரோடு நட்பு கொள்ளும் முன், அதை ஆராய்தல் அவசியம்னு. நான் என்ன நினைக்கிறேன்னா நட்பு என்கிற நிலையே, அவரை இன்னும் முழுமையாக ஆராய்கிற இடம்னு தான்.

இதிலே என்ன ஒரு பிரச்சனைன்னா பத்து பேரை சுலபமாநண்பர்கள்ன்னு சொல்றவங்க, அதே பத்து பேரை சகோதரர்கள்னு சொல்றதுக்கு யோசிப்பது தான்.

நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பற்றி சொன்ன வள்ளுவர்கூட நட்பின் அடுத்த நிலை பற்றி சொல்லி இருக்கிறாரா? எனக்கு தெரியலை. ஆனால் கம்பர் அதைப்பற்றி யோசித்து இருக்கிறார்னு தான் சொல்லனும்.

ராமன் தன்னோட நட்பை பற்றி சொல்லும் போது, குகனோடு ஐவரானோம், அனுமனோடு அறுவரானோம் சொல்வதுதான் நட்பின் அடுத்த நிலை. ஆக நட்பு என்பதே ஒரு தற்காலிக நிலை தான்.

கமல் ஹாசனிடம் ஒரு முறை உங்கள் " நண்பர் சந்தான பாரதி " பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது அவர் சொன்னது. " பாரதி எனக்கு ஒரு நல்ல தம்பி, என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சித்தப்பா " என்பது தான்.

(ஆக அடுத்த நிலைக்கு போகனும்னா, நாம் அல்லது நம்முடைய நண்பர் யாரோ ஒருத்தர் இன்னும் உண்மையான மற்றும் முழுமையான அன்போட நெருங்குவது தான் சரி. !!!!! )

நட்பையே யோசிக்கும் போது ஆண் நட்பு, பெண் நட்பு பற்றி எல்லாம் பேசுவது தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

அன்புடன்
கே. ஆர். பி

Saturday, April 5, 2008

முதல் பதிவு

வணக்கம்
இது என்னுடைய முதல் பதிவு.

எந்த ஒரு துறையை சார்ந்த கலைஞனுடைய படைப்பும் இரண்டு பொது விதிகளை உள்ளடக்கியதாய் இருத்தல் அவசியம். (?????)

ஒன்று தம்முடைய படைப்பின் மூலம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பதிவு செய்வதாக அமைய வேண்டும். ( தாலி, கற்பு, குடும்ப அமைப்பு, விருந்தோம்பல் ?????)

இரண்டு தம்முடைய படைப்பின் மூலம் மக்களை யோசிக்க (சிந்திக்க) வைக்க வேண்டும். எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு சொல்வது கலைஞனின் கடமையன்று. அந்த பிரச்சனை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்குவதே கலைஞனின் வேலை. (கலைஞன் மக்களை தேர்தலில் வாக்களிக்க தூண்ட வேண்டும் (?), ஆனால் இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என சொல்லக் கூடாது ????? அப்படி சொல்பவர் கலைஞன் அல்ல அரசியல்வாதி)

இந்த இரண்டு விசயங்களையுமே ஒருமித்து செய்வது என்பது கொஞ்சம் கடினம்.

மக்களை சிந்திக்க விடாமல் முடக்கி வைத்து இருப்பதே கலாச்சாரம், பண்பாடு என்ற விசயங்கள் தான் என்பது, மக்களை சிந்திக்க வைத்தவர்களின் (பெரியார், எம். ஆர். ராதா) எண்ணம்.

ஒருவேளை மக்களே சிந்தித்து இருந்திருந்தால், மற்றவர்கள் கலாச்சாரத்தில் கை வைக்காமல் இருந்திருப்பார்கள்.

நானும் முயற்சி செய்கிறேன்.

அன்புடன்
கே.ஆர்.பி