Thursday, April 24, 2008

கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே இரண்டு முதல் முழு ஓய்வு !!!!!

வ வா சங்கத்து போட்டிக்கான (நகைச்சுவை )பதிவு

http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html

தினத் தந்தி :
முதல் அமைச்சர் மு கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , (மே ஒன்று உழைப்பாளர் தினமாக இருப்பதால் ) மே இரண்டு முதல் முழு ஓய்வு

தினகரன் :
தமிழக முதலமைச்சராக மே இரண்டு ஸ்டாலின் பதவி ஏற்கிறார் .

தினமலர்
ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க , அன்பழகன் வகித்த இரண்டாம் இடத்திற்கான தேர்தல் : கலைஞர் அறிவிப்பு .

தமிழ் ஓசை
இரண்டாம் இடத்திற்கு தேர்தலா ? தி மு க இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிர்ச்சி. உள்ளே முழு விவரம்.

நமது எம்ஜிஆர்
விஜயகாந்த் , சரத்குமார் இரண்டு பேரின் விண்ணப்பங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் . - ஜெயலலிதா
தேர்வுக் கமிட்டியில் வக்கீல் ஜோதி - இரண்டாம் தடவையாக பேரதிர்ச்சி அடைந்தேன்

முரசொலி.
அறிவாலயத்தில் இரண்டாம் இடத்திற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் வேலை துவங்கியது. ரஜினியின் விண்ணப்பத்தை எதிர்பார்த்த கருணாநிதி ஏமாற்றம். கலைஞர் கவிதை

குமுதம்
இரண்டாம் இடம் கூட பெண்களுக்கு இல்லையா ? இது ஆணாதிக்கம் . குஷ்பூ ஆவேசம் .

ஆனந்த விகடன்
இரண்டாம் இடமாக இருந்தாலும் பரவாயில்லை. ராடான் குடும்பத் திலேயும் அப்படித்தானே இருக்கிறீர்கள் . சரத்துக்கு ராடான் ராதிகா ஆறுதல்

ஜூனியர் விகடன்
இரண்டாம் இடத்தில் விஜயகாந்த் ஏன்? கலா நிதி ஆதரவா ? தயா நிதி பேட்டி

கலைஞர் டிவியில் ஸ்டாலின் :
விஜயகாந்த் , சரத் குமார் இரண்டு பேருக்கும் தனித்தனியாக வாழ்த்துச் செய்தி .

ஜெயா டிவியில் அம்மா :
தயா நிதியாக இருந்தால் தமிழ் தவிர இரண்டு அன்னிய மொழிகளில் கூட பேசலாம் . விஜயகாந்தி டம் எப்படி பேசுவது? கேப்டன் தமிழ் வேறு எனக்கு தெரியாது. அம்மா சோகம் .

மக்கள் டிவியில் ராம தாஸ் சொன்னதாக ஜி கே மணி :
இரண்டாம் இடத்தில் சினிமாக் காரர்களை நியமிக்க கூடாது . எங்கள் சொல்லை மீறினால் மூன்றாவது அணி அமைப்போம் இல்லை இல்லை . அண்ணா திமுகவோடு இணைந்து அங்கேயும் இரண்டாவது இடத்தில் இருப்போம் .

சன் டிவியில் விஜயகாந்த் :
எம் ஜி ஆரூம் திமுக வில் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தவர் தான் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கலைஞரை விமர்சித்ததற்கு மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் . என்னா தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு மட்டும் தான்.

தேர்வு நிலவரம்
கலைஞர் கருணாநிதி , புரட்சி கலைஞரை வேறு வழியில்லாமல் இரண்டு மனதாக தேர்ந்து எடுத்தார்.

கடைசி செய்தி
துக்ளக் ஐயோ பக்கங்களில் ஞானி
விஜய காந்த்தோடு கடந்த இரண்டு ஆண்டுகள் முழுமையாக மோதியோ , கவனித்தோ பார்த்ததில் , ஸ்டாலின் கற்றுக்கொள்ள இரண்டு (எப்படி தமிழ் பேசக்கூடாது , வாரிசை மட்டுமல்லாமல் (மனைவி வீட்டு) குடும்பம் உள்பட எப்படி உள்ளே கொண்டு வருவது ) விஷயங்கள் இருப்பதாக கலைஞர் நினைத்து இருக்கலாம்.

அன்புடன்
கே ஆர் பி

5 comments:

Anonymous said...

romba supperungo

hari

வெட்டிப்பயல் said...

பதிவு சூப்பருங்கோ...



குறிப்பாக

--ஸ்டாலின் கற்றுக்கொள்ள இரண்டு (எப்படி தமிழ் பேசக்கூடாது , வாரிசை மட்டுமல்லாமல் (மனைவி வீட்டு) குடும்பம் உள்பட எப்படி உள்ளே கொண்டு வருவது )--

--இரண்டாம் இடமாக இருந்தாலும் பரவாயில்லை. ராடான் குடும்பத் திலேயும் அப்படித்தானே இருக்கிறீர்கள் . சரத்துக்கு ராடான் ராதிகா ஆறுதல்--

பிரேம்ஜி said...

செம காமெடி. கலக்கிட்டீங்க.

சிறில் அலெக்ஸ் said...

நல்ல கற்பனை. சூப்பர்.

Anonymous said...

அனைவருக்கும் நன்றி

வ வா சங்கத்து போட்டிக்காக இந்த பதிவு


(ப்ளாக்கரை லாவகமாக கையாளும் சூட்சமம் , இன்னும் பிடிபட வில்லை .
அதனால் தான் பின்னூட்டத்திற்கு பதிலிடுவதில் தாமதம் )

அன்புடன்
கே ஆர் பி