Thursday, April 10, 2008

நட்பு என்பது தற்காலிக நிலையா..............

உங்ககூட படிக்கிற அல்லது வேலை பார்க்கிற யாரையாவது நீங்க நண்பர்னு அறிமுகப்படுத்தினா, நீங்க இன்னும் அவரை உங்களோட சகோதரர், சகோதரி அல்லது இன்னும் ஏதேனும் உறவுக்குள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை, அப்படின்னு நினைக்கிறேன்.

வள்ளுவர் சொன்னது ஒருவரோடு நட்பு கொள்ளும் முன், அதை ஆராய்தல் அவசியம்னு. நான் என்ன நினைக்கிறேன்னா நட்பு என்கிற நிலையே, அவரை இன்னும் முழுமையாக ஆராய்கிற இடம்னு தான்.

இதிலே என்ன ஒரு பிரச்சனைன்னா பத்து பேரை சுலபமாநண்பர்கள்ன்னு சொல்றவங்க, அதே பத்து பேரை சகோதரர்கள்னு சொல்றதுக்கு யோசிப்பது தான்.

நட்பு, நட்பாராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பற்றி சொன்ன வள்ளுவர்கூட நட்பின் அடுத்த நிலை பற்றி சொல்லி இருக்கிறாரா? எனக்கு தெரியலை. ஆனால் கம்பர் அதைப்பற்றி யோசித்து இருக்கிறார்னு தான் சொல்லனும்.

ராமன் தன்னோட நட்பை பற்றி சொல்லும் போது, குகனோடு ஐவரானோம், அனுமனோடு அறுவரானோம் சொல்வதுதான் நட்பின் அடுத்த நிலை. ஆக நட்பு என்பதே ஒரு தற்காலிக நிலை தான்.

கமல் ஹாசனிடம் ஒரு முறை உங்கள் " நண்பர் சந்தான பாரதி " பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது அவர் சொன்னது. " பாரதி எனக்கு ஒரு நல்ல தம்பி, என் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சித்தப்பா " என்பது தான்.

(ஆக அடுத்த நிலைக்கு போகனும்னா, நாம் அல்லது நம்முடைய நண்பர் யாரோ ஒருத்தர் இன்னும் உண்மையான மற்றும் முழுமையான அன்போட நெருங்குவது தான் சரி. !!!!! )

நட்பையே யோசிக்கும் போது ஆண் நட்பு, பெண் நட்பு பற்றி எல்லாம் பேசுவது தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

அன்புடன்
கே. ஆர். பி

No comments: