Tuesday, April 15, 2008

உங்களுக்கு இது போல் நேர்ந்ததா?

இது அண்மையில் எனக்கு நேர்ந்தது.

வெளிநாட்டில் பணிபுரியும் நான் வழக்கம் போல் ஒரு தமிழ் ஓட்டலுக்கு சென்றேன். தோசையை வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து எனக்கு எதிரில் அமர்ந்த ஒருவர் செல்போனில் யாரோடு ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். திடீரென , நான் ஸ்பூனால் சாப்பிடாமல் கையால் சாப்பிடுவதை நண்பரிடம் விமர்சனம் செய்தவர், பின் மரியாதைக்குறைவாக திட்ட ஆரம்பித்தார். எனக்கு பாதியில் எழுந்து விடுவதை விட வேறு வழி தெரியவில்லை. நானும் எழுந்து வந்து விட்டேன்.

அவர் சொன்னது, "இந்தியாவில் இருந்து வந்துட்டானுங்க.நாகரீகம் இல்லாம, இதுல உலகம் முழுவதும் பரவி இருக்கிரானுங்க பேர் வேற".

அது தமிழ் ஓட்டல் தான் என்பதால், என்னைத்திட்டியவர் கண்டிப்பாக தமிழராக அல்லது இந்தியராக இருக்கணும்.

இது போல் மும்பை, டெல்லி வாழ் தமிழர்களுக்கு கூட ஏற்பட்டு இருக்கணும்.
உங்களுக்கு இது போல் நேர்ந்ததா? நீங்கள் என்ன செய்தீர்கள்?

நான் ஒருவழியா மனசை இப்படித்தான் தேத்திக்கிட்டேன் .
௧)நான் அன்னிக்கு உண்மையிலே அநாகரீகமா சாப்பிட்டு இருக்கணும்.
௨)வெளிநாடு வரைக்கும் வந்த நான், ஸ்பூனால சாப்பிடவும் பழகி இருக்கனும்.

வெங்காய தோசையை ஸ்பூனால சாப்பிடறது உண்மையிலே எனக்கு கஷ்டங்க. உங்களுக்கு?

அன்புடன்
கே. ஆர். பி.

10 comments:

பிரேம்ஜி said...

வணக்கம் மைல்டஸ் ! அவங்க கெடக்குறானுங்க விடுங்க. சில உணவு வகைகளை கையாலே சாப்பிட்டால் தாங்க சுவையே. கழுதைகளுக்கு தெரியுமா? இங்கே வந்த இந்தியர்கள் தான் இப்படி ரொம்ப சலம்புவார்கள். என்னமோ இவங்க இந்தியா கௌரவத்தை காப்பாத்தற மாதிரி. பர்கரை எப்படி சாப்பிடுவாங்கன்னு கேட்டு பாருங்க.

TBCD said...

அவன் தாத்தா ஆங்கிலேயரா இருக்கலாம்..

நம்ம வழக்கம் நம்க்கு இடைஞ்சலாக இல்லாத வரை மாற்றத் தேவையில்லை.

ஆனா, வெங்காய தோசை சொன்னீங்க. எனக்குத் தெரிஞ்சு பெங்களூரில் பூரியே கரண்டியில் சாப்பிடாறாங்க்.. :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடந்திருக்குங்க.. ஒரு முறை தில்லியில் கர்நாடகா பவனில் ஒரு இந்தி குடும்பம் வந்து பக்கத்தில் அமர்ந்தது அந்த குடும்பத்து அப்பா தன் குழந்தைகளிடம் பாருங்க எப்படி சாப்பிடறாங்கன்னு சவுத் இண்டியனே இப்படித்தான் சாதத்தை கையால் சாப்பிடறாங்க.. ன்னு கிண்டலா சொன்னார்.. தனிவாத்தான் சொன்னார் ஆனா கேட்டிருச்சு.. நாங்கள் அவர்களை கொஞ்ச நேரம் தொடர்ந்து கவனித்த பின் அவர்களுக்கு வெக்கமாக போய் விட்டது தலை குனிந்து கொண்டார்கள்.. அடூத்தவர்களை குறைத்து மதிப்பீடு செய்வதில் யாரும் சளைத்தவர்கள் இல்லை..
எத்தனை ஆங்கிலப்படம் பார்க்கிறோம் கேக் செய்து கொண்டே அதை நக்கி பார்த்து விட்டு சமைக்கிறவர்களையும் விரல்களை சப்புக்கொட்டி சாப்பிடும் வெளிநாட்டினரையும் காட்டுகிறார்களே .. எதுக்கு மனச அலட்டிக்கிறீங்க..

(ப்ளீஸ் வெர்டு வெரிபிகேஷன் எடுத்துவிடவும் )

வால்பையன் said...

நமது தோசை தான், அங்கெ பீசா, பர்கர் எல்லாம்
அதை ஸ்பூனால் சாப்பிட முடியுமா அந்த நாய்களால்,
நீங்கள் ஏன் பாதியில் எழுந்தீர்கள்,
உனக்கு கஷ்டமா இருந்தா எழுந்து போடா என்று சொல்லியிருக்க வேண்டியது தானே

வால்பையன்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

நம் கை நம்மை தவிர வேரு யாரும் உபயோகிப்பது கிடையாது :) நாம் உணவு உண்பதற்கு முன் கையை நன்கு கழுவுபவர்கள். அவர் உபயோகித்த spoon' எத்தனை பேர் உபயோகித்திருப்பார்களோ! அதை எப்படி கழுவியிருப்பார்களோ!!

சுத்தம் எது நாகரீகம் எது என்பதை அறியாதவர்களின் இது போன்ற பேச்சு சிரிப்பைதான் வரவைக்கும் :) அவர்களை சட்டைசெய்யகூடாது.

ஜமாலன் said...

நண்பருக்கு..

பண்பாட்டு ஏகாதிபத்தியம் (cultural imperialism) என்று கேள்விப்பட்டள்ளீர்களா? அதுதான் இது.

அந்த சூழலில் நீங்கள் சட்னி சாம்பாரை அதிகமாக ஊற்றி நன்றாக குழைத்து அவர்மேல் தெறிக்க அடித்து சாப்பிட்டுவிட்டு.. நீங்களும் செல்லில்.. அதன் ருசியை ஆராதித்து சும்மாவாவது படங்காட்டியிருக்க வேண்டும். அந்தநாளை அவர் மறக்க முடியாமல் செய்திருக்க வேண்டும். தவறிட்டுவிட்டீர்கள்.

கையிலிருந்த ஒரு அமிலம் சுரந்து சுவையை கூட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் என்றும் உலகிலேயே நாகரீகத்தின் நவீன விஞ்ஞானத்தின் மூத்தகுடி நமது பண்பாடுதான் என்று அவரை சாத்துக்குடியாக சக்கையாக பிழிந்திருக்க வேண்டும்.

உங்கள் செயலுக்காக உங்களை பண்பாட்டு அடிப்படையில் வருத்தப்பட வைப்பதும் உங்களை நாகரீகமற்றவனாக உணரச் செய்வதும்தான் பண்பாட்டு எகாதிபத்தியத்தின் பணி. அதன் இந்திய முகவரைதான் நீங்கள் சந்தித்துள்ளீர்கள். உண்மையில் நாகரீகத்தின் தொட்டில் எல்லாம் நமது கிழக்குலகங்களைச் சார்ந்த சமூகங்கள்தான். பைபிள், வேதம், குரான துவங்கி பை, சுழியம், அணாட்டமி என்கிற உடற்கூற்று ஆய்வுவரை மேற்குலகம் நம்மிடம் கற்றுக்கொண்டு அதை வைத்த நம்மீதே ஆதிக்கம் செலுத்துகிறது. அதனிடம் விழிப்புடன் இருப்பது அவசியம். அவர்கள் உலகிற்கு தந்தது என்ன எய்ட்ஸ் மற்றும் அனுகுண்டு? என்பதை நினைவில் கொள்வது நல்லது.

இவர்கள் வெள்ளையனைவிட மோசமான பண்பாட்டு காவலர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அவர்களைவிட ஆபத்தானவர்களும்கூட.

Mani - மணிமொழியன் said...

தோசை, அப்பளம், சப்பாத்தி எல்லாம் எப்படிங்க ஸ்பூன்ல சாப்பிடறது?
அந்த ஆளு உளறான்னு சும்மா விட்டிருக்கனும், இல்ல ”உன் இலைய மட்டும் பார்த்து சாப்பிடு”னு திட்டியிருக்கனும். அப்பதான் இந்த வெத்து வேட்டுங்க அடங்கும்.

கானா பிரபா said...

இந்தக் கொடுமை எல்லா இடத்திலும் இருக்கு. வேலையில் சக பிறநாட்டு நண்பர்களும் கேட்பார்கள். அவர்கள் எல்லோருக்குமே ரெடிமேடா பதிலும் வச்சிருக்கேன். மக்டொனால்ட்ஸ் பர்கரை எப்படி சாப்பிடுவீங்க அப்படி.

தென்றல் said...

என்னங்க, இதுக்குலாம் போய் feel பண்ணிகிட்டு...

/சில உணவு வகைகளை கையாலே சாப்பிட்டால் தாங்க சுவையே. /

அது..!!

/அந்த சூழலில் நீங்கள் சட்னி சாம்பாரை அதிகமாக ஊற்றி நன்றாக குழைத்து அவர்மேல் தெறிக்க அடித்து சாப்பிட்டுவிட்டு.. நீங்களும் செல்லில்.. அதன் ருசியை ஆராதித்து சும்மாவாவது படங்காட்டியிருக்க வேண்டும். அந்தநாளை அவர் மறக்க முடியாமல் செய்திருக்க வேண்டும்./

பார்த்திபன் ரவுசால இருக்கு...! ;)

Anonymous said...

அனைவருக்கும் நன்றி

ப்ளாக்கரை லாவகமாக கையாளும் சூட்சமம் , இன்னும் பிடிபட வில்லை .
அதனால் தான் பின்னூட்டத்திற்கு பதிலிடுவதில் தாமதம்

அன்புடன்
கே ஆர் பி